Aduthavan Potta Thalathu
Thenum Paalum
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers L.R.Eswari,Tharapuram Sundarajan
Year 1971
Song Lyrics

அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம்
ஆடாதே........ஆடாதே.......ஆடாதே.........-அந்த
ஆட்டமும் பாட்டமும் குடும்ப பொண்ணுக்கு
ஆகாதே........ஆகாதே........ஆகாதே.........

எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து
கெடுக்காதே........கெடுக்காதே......கெடுக்காதே...எங்க
பாட்டன் சொத்தில ஆட்டம் போட்டால்
தடுக்காதே.......தடுக்காதே.......தடுக்காதே......(அடுத்தவன்)

வெத்திலை போட்டு சிவக்க வேணும்
பத்தினி பொண்ணு உதடு – கண்ட சாயத்தைப்
பூசி வாயத் தொறந்தா பணத்துக்கு கேடு....
கொத்து மஞ்சளை கொழைச்சு போட்ட முகத்தையும் பாரு
அதில் மாவை அரைச்சு பூசியிருந்தா......
சகிக்கல பாரு .ஆஹா..சகிக்கல பாரு.....

கூந்தலுக்கேத்த பூவைச்சூடி அழகு பார்க்கணும் - நல்ல
குடும்ப பெண்ணும் ஆடல் கலையை பழகிப் பார்க்கணும்
இடுப்ப வளைச்சு ஆடும்போது ரசிச்சுப் பார்க்கணும்-உனக்கு
இஷ்டமில்லாட்டி கஷ்டப்படாம ஒதுங்கி நிற்கணும் (அடுத்தவன்)

மாதவி போட்ட ஆட்டத்தினாலே கோவலன் கெட்டானே
அவன் மங்கலமங்கை கண்ணகி பெண்ணை மறந்து போனானே
சுட்டப் பிறகு புத்தி பொறந்து சட்டியை விட்டானே
அவன் பட்டதுக்கெல்லாம் காரணம் இந்த நாட்டியம் தானே

வண்ண மயில்களில் சின்னக் குயில்களில் பெண்ணும் ஒரு ஜாதி
அவள் ஆடித்திரிவதும் பாடிப் பறப்பதும் இயற்கையின் நீதி
கண்ணுக்கழகான பொண்ணு முகம்தான் வெண்ணிலவின் பாதி –அதை
கட்டுப்படுத்த சட்டம் விதிப்பது அந்தக்கால சேதி
ஆஹா..ஹா....அந்தக்கால சேதி (அடுத்தவன்)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY